மக்கள் நலனை பாதுகாக்கும் வகையில் மாநில அரசு செயல்படவில்லை


மக்கள் நலனை பாதுகாக்கும் வகையில் மாநில அரசு செயல்படவில்லை
x
தினத்தந்தி 21 Jun 2017 10:30 PM GMT (Updated: 21 Jun 2017 8:10 PM GMT)

மக்கள் நலனை பாதுகாக்கும் வகையில் மாநில அரசு செயல்படவில்லை ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மணப்பாறை

மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வருகை தந்த கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்திய அரசு இந்துத்துவா கொள்கையை மக்கள் மீது திணிக்க பகிரங்கமாக முயற்சிக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் மதசார்பற்ற எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு பொதுவேட்பாளைரை நிறுத்த இடதுசாரி முயற்சி மேற்கொண்டு வருகிறது. நாளை மாலை டெல்லியில் மதசார்பற்ற கட்சிதலைவர்கள் கூடி விவாதிக்க உள்ளனர். அ.தி.மு.க இரண்டு அணிகளுக்குள் நடைபெறும் அதிகார போட்டியை பயன்படுத்தி பா.ஜ.க இரண்டு கோஷ்டிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள கடுமையான முயற்சி எடுக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழங்கு சீர்கெட்டுள்ளது. வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. மக்கள் நலனை பாதுகாக்கும் வகையில் மாநில அரசு செயல்படவில்லை. மக்கள் நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் எந்த சமூகத்தை சார்ந்தவர் என்பதைவிட அவர், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வில் நீண்ட காலம் பொறுப்பில் உள்ளவர் என்பதால் எதிர்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story