குப்பையில் கிடந்த மண்ணுளி பாம்பு


குப்பையில் கிடந்த மண்ணுளி பாம்பு
x
தினத்தந்தி 22 Jun 2017 9:30 PM GMT (Updated: 22 Jun 2017 2:47 PM GMT)

அரக்கோணம், நேருஜி நகரில் எரிவாயு தகன மேடை உள்ளது. இதன் சுற்றுச்சுவர் அருகே நகராட்சி ஊழியர்கள் நேற்று குப்பைகளை அள்ளி கொண்டு இருந்தனர்.

அரக்கோணம்,

அரக்கோணம், நேருஜி நகரில் எரிவாயு தகன மேடை உள்ளது. இதன் சுற்றுச்சுவர் அருகே நகராட்சி ஊழியர்கள் நேற்று குப்பைகளை அள்ளி கொண்டு இருந்தனர். அப்போது குப்பைகளுக்கு இடையில் இருந்த 4 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு வெளியே வந்தது. இதை பார்த்த நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அலறியடித்து ஓடினார்கள். இதனால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது. பாம்புக்கு 2 பக்கமும் தலை இருந்ததால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்து சென்றனர்.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி சேகர் தலைமையில் வீரர்கள் சென்று உயிருடன் மண்ணுளி பாம்பை பிடித்து கோணிப்பையில் போட்டனர்.

இதுகுறித்து ராணிப்பேட்டை வனத்துறை அதிகாரி விஜய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனக்காவலர்கள் அரக்கோணம் தீயணைப்பு நிலையத்திற்கு சென்று மண்ணுளி பாம்பை மீட்டு சென்றனர்.

பிடிப்பட்ட மண்ணுளி பாம்பு மருத்துவ குணம் கொண்டதாகும். சுமார் ரூ.2 லட்சம் வரை மதிப்புடையதாகும் என்று அந்த பகுதியில் வசிக்கும் நாட்டு வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.


Next Story