திருத்தணி முருகன் கோவிலில் பிரசாத விற்பனை நிலையம் ரூ.1½ கோடிக்கு ஏலம்


திருத்தணி முருகன் கோவிலில் பிரசாத விற்பனை நிலையம் ரூ.1½ கோடிக்கு ஏலம்
x
தினத்தந்தி 22 Jun 2017 8:30 PM GMT (Updated: 22 Jun 2017 7:12 PM GMT)

திருத்தணி முருகன் கோவிலில் உள்ள பிரசாத விற்பனை நிலையத்தை ஒரு ஆண்டுக்கு ஏற்று நடத்துவதற்கான ஏலம் நேற்று கோவில் நிர்வாக அலுவலகத்தில் நடந்தது.

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில் உள்ள பிரசாத விற்பனை நிலையத்தை ஒரு ஆண்டுக்கு ஏற்று நடத்துவதற்கான ஏலம் நேற்று கோவில் நிர்வாக அலுவலகத்தில் நடந்தது. கோவில் தக்கார் ஜெயசங்கர் மேற்பார்வையில் கோவில் இணை ஆணையர் சிவாஜி, வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக் குமார் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே ஏலம் நடத்தப்பட்டது. இதில் பழனியை சேர்ந்த ஹரிஹரமுத்து என்பவர் பிரசாத விற்பனை நிலையத்தை ரூ.1 கோடியே 56 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். கடந்த ஆண்டு இந்த பிரசாத விற்பனை நிலையம் ரூ.1 கோடியே 53 லட்சத்து 20 ஆயிரத்துக்கு ஏலம் போனது.


Next Story