செவ்வாப்பேட்டை அருகே ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரின் மோட்டார் சைக்கிள் எரிப்பு


செவ்வாப்பேட்டை அருகே ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரின் மோட்டார் சைக்கிள் எரிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2017 10:15 PM GMT (Updated: 14 Sep 2017 5:49 PM GMT)

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டையில் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரின் மோட்டார் சைக்கிள் எரிப்பு.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டையை அடுத்த தொழுவூர் துர்க்கை அம்மன் நகரை சேர்ந்தவர் இளமாறன். ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். நேற்று முன்தினம் இரவு அவர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் வீட்டுக்கு வெளியே சத்தம் கேட்பதை கேட்டு எழுந்து கதவை திறந்து பார்த்தார். அப்போது மர்மநபர்கள் வீட்டின் வெளியே நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்மநபர்கள் அங்கிருந்த இளமாறனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை எரித்து விட்டு தப்பிச்சென்று விட்டனர். உடனடியாக மோட்டார் சைக்கிளில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. எனினும் மோட்டார் சைக்கிளின் பின் பகுதி சேதம் அடைந்தது.

இதே வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொள்ளை நடந்தது. தற்போது மீண்டும் மர்மகும்பல் கைவரிசை காட்ட வந்து இருக்கிறது. 

இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story