காதல் பெயரால் சிறுமி கடத்தப்பட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம் 8 பேர் கைது


காதல் பெயரால் சிறுமி கடத்தப்பட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம் 8 பேர் கைது
x
தினத்தந்தி 20 Sep 2017 6:27 AM GMT (Updated: 20 Sep 2017 6:27 AM GMT)

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே 14 வயது சிறுமி காதலனால் ஏமாற்றப்பட்டு வீடுகளிலும், விடுதிகளிலும் அடைத்து வைக்கபட்டு பாலியல் செய்யபட்ட சம்பவத்தில், இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவரது மகள் கடந்த 9-ம் தேதி வெளியே சென்ற பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கருங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சிறுமியை தேடிவந்த நிலையில், மார்த்தாண்டம் அருகே விரிகோடு என்னும் பகுதியில் ஒரு சிறுமியை நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் கடத்தி செல்ல முற்பட்டதாகவும், அவர்களை பொதுமக்கள் பிடித்து வைத்திருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் அங்கு சென்று போலீசார் விசாரித்தபோது, வாலிபர்கள் கடத்த முயன்ற சிறுமி, காணாமல் போன நிர்மலாவின் மகள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியை மீட்ட போலீசார், அவரை கடத்த முயன்ற நான்கு வாலிபர்களையும்  குளச்சல் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமியை ஒரு வாலிபன்  காதலிப்பதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அந்த வாலிபர்  அதோடு நில்லாமல், தனது நண்பர்களுக்கும் சிறுமியை விருந்தாக்கியுள்ளார். மேலும், வீடுகள் மற்றும் விடுதிகளில் சிறுமியை அடைத்து வைத்து, பலர் பாலியல்பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், விரிகோடு பகுதியில் தங்க வைக்கப்பட்ட சிறுமியை நாகர்கோவிலுக்கு அழைத்து செல்லும் வழியில்தான் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீசார், குளச்சல் தங்கும் விடுதி ஊழியர் ஒருவர் உட்பட எட்டுபேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் எனவும், இதனால், கைது எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

Next Story