குளத்தூரில் 108 ஆம்புலன்சு சேவை தொடக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதி மக்களுக்கு உதவும் வகையில் ஏற்பாடு

குளத்தூரில் 108 ஆம்புலன்சு சேவை தொடக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதி  மக்களுக்கு உதவும் வகையில் ஏற்பாடு
x
தினத்தந்தி 20 Sep 2017 9:30 PM GMT (Updated: 20 Sep 2017 1:40 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில், கிழக்கு கடற்கலை சாலை பகுதி மக்களுக்கு உதவும் வகையில் நேற்று குளத்தூரில் 108 ஆம்புலன்சு சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில், கிழக்கு கடற்கலை சாலை பகுதி மக்களுக்கு உதவும் வகையில் நேற்று குளத்தூரில் 108 ஆம்புலன்சு சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

ஆம்புலன்சு

தூத்துக்குடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்சு சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மாவட்டம் முழுவதும் 16 ஆம்புலன்சுகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம், கடந்த மாதம் 1986 பேர் இந்த ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர். இதில் மகப்பேறு அவசரத்துக்கு 486 பேரும், விபத்துக்கு 347 பேரும் பயன்படுத்தி உள்ளனர். இதுவரை இந்த மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்துக்கு அதிகமானவர்கள் இந்த சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

குளத்தூரில்...

தற்போது, மாவட்டத்தில் 108 ஆம்புலன்சு சேவை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன்படி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள குளத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு உதவும் வகையில் குளத்தூரில் 108 ஆம்புலன்சு சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆம்புலன்சை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜையா, ஆம்புலன்சு கோட்ட மேலாளர் ரஞ்சித், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், கோட்ட வாகன மேற்பார்வையாளர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story