வெளிநாட்டு பெண்கள் உள்பட 3 அழகிகள் மீட்பு


வெளிநாட்டு பெண்கள் உள்பட 3 அழகிகள் மீட்பு
x
தினத்தந்தி 20 Sep 2017 11:00 PM GMT (Updated: 20 Sep 2017 9:37 PM GMT)

புனேயில் விபசாரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள் உள்பட 3 அழகிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

புனே,

புனே, எரவாடா பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ஹைடெக் விபசாரம் நடப்பதாக சமூககுற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் போலி வாடிக்கையாளரை ஓட்டலுக்கு அனுப்பி சோதனை போட்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு அறையில் விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஓட்டல் அறையில் அதிரடியாக நுழைந்தனர்.

போலீசார் அறையில் இருந்த 3 விபசார அழகிகளை மீட்டனர். இதில் ஒருவர் ரஷ்யாவையும், மற்றொருவர் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர் ஆவார். ஒரு அழகி டெல்லியை சேர்ந்தவர் ஆவார். போலீசார் அழகிகளிடம் விசாரணை நடத்தி அவர்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வெளிநாட்டு அழகிகளை வைத்து விபசாரம் நடத்தியதாக மும்பையை சேர்ந்த முக்கிய தரகர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story