திட்டக்குடி, சேத்தியாத்தோப்பில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


திட்டக்குடி, சேத்தியாத்தோப்பில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2017 11:00 PM GMT (Updated: 20 Sep 2017 9:37 PM GMT)

திட்டக்குடி, சேத்தியாத்தோப்பில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சேத்தியாத்தோப்பு,

திட்டக்குடி தொகுதி அ.தி.மு.க. சார்பில் திட்டக்குடியில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மங்களூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கே.பி.கந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் குமார், கூட்டுறவு வீடுகட்டுபவர் சங்க தலைவர் மதியழகன், ஒன்றிய இணை செயலாளர் வெள்ளையம்மாள் கலியமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி முத்துராமன் கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்டக்குடி நகர செயலாளர் நீதிமன்னன் அனைவரையும் வரவேற்றார். நல்லூர் ஒன்றிய செயலாளர் தொடக்க உரை ஆற்றினார். தலைமை கழக பேச்சாளர் நாகய்யா சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன், சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாறன், பாண்டியன், முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் இளங்கோவன், நகர பேரவை தலைவர் செல்வராஜ், நகர விவசாய பிரிவு அரங்க.முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர கூட்டுறவு சங்க தலைவர் முல்லை நாதன் நன்றி கூறினார்.

புவனகிரி சட்டமன்ற தொகுதி சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சேத்தியாத்தோப்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புவனகிரி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் கீரப்பாளையம் ஜெயபாலன், கம்மாபுரம் மருதை.முனுசாமி, ஸ்ரீமுஷ்ணம் கலியமூர்த்தி, புவனகிரி பேரூர் செயலாளர் செல்வக்குமார், கெங்கைகொண்டான் பேரூர் செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் பாராளு மன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன், எம்.எல்.ஏ.க்கள் முருகுமாறன், பாண்டியன், தலைமை கழக பேச்சாளர் நாகேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் புவனகிரி தொகுதி செயலாளர் கருப்பன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், நிர்வாகிகள் பிரித்திவி, சீனிவாசன், ஜெயராமன், சிவஞானம், ராஜ்குமார், சித்ரா, பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Next Story