நவராத்திரி விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது


நவராத்திரி விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது
x
தினத்தந்தி 20 Sep 2017 11:15 PM GMT (Updated: 20 Sep 2017 9:39 PM GMT)

முப்பெருந்தேவியரான பார்வதி, லெட்சுமி, சரஸ்வதியை போற்றி வழிபடும் நவராத்திரி பண்டிகை இன்று கோலாகலமாக தொடங்குகிறது

மும்பை,

நவராத்திரி விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

முப்பெருந்தேவியரான பார்வதி, லெட்சுமி, சரஸ்வதியை போற்றி வழிபடும் நவராத்திரி பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி மும்பையில் மண்டல்களில் தேவி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 9 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளன.

நவராத்திரியின் சிறப்பு அம்சமான கர்பா மற்றும் தாண்டியா நடன நிகழ்ச்சிகள் களை கட்டும். மும்பையில் தமிழர்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்த உள்ளனர்.

இதற்காக கொலு பொம்மைகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். தமிழர்கள் நிர்வகிக்கும் அம்மன் கோவில்களில் 9 நாட்களும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

நவராத்திரி விழாவையொட்டி தாராவியில் உள்ள மகமாயி சந்தனமாரியம்மன் கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் இன்று விஸ்வகர்மா சமுதாய மக்கள் சார்பில் சிறப்பு பூஜை நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கம் சார்பிலும், 23–ந் தேதி தென்னிந்திய இல்லத்து பிள்ளைமார் சமுதாயத்தினர் சார்பிலும், 24–ந் தேதி மும்பை வானியசெட்டியார் சங்கம் சார்பிலும், 25–ந் தேதி யாதவர் சங்கம் சார்பிலும், 27–ந் தேதி பட்டங்கட்டியார் சங்கம் சார்பிலும், 29–ந் தேதி காலை தென்னிந்திய ஆதிதிராவிட மகாஜன சங்கத்தினர் சார்பிலும், இரவு செங்குந்த முதலியார் சங்கம் சார்பிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

இதேபோல தாராவியில் உள்ள கருமாரியம்மன் கோவில், காட்கோபர் காமராஜ்நகரில் உள்ள ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.


Next Story