கோமாரி நோய் தடுப்பூசி முகாம்


கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 20 Sep 2017 11:52 PM GMT (Updated: 20 Sep 2017 11:51 PM GMT)

மன்னார்குடி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அரிமா சங்கம் மற்றும் மன்னார்குடி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கொற்கை, சேகல், பாமணி, விட்டுக்கட்டி, வரம்பியம், கொத்தமங்களம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்றது. கால்நடை மருத்துவர் ராமலிங்கம், உதவி மருத்துவர்கள் காவ்யா, கங்காசுதன் ஆகியோர் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டனர். முகாமில் 4 ஆயிரத்து 500–க்கும் அதிகமான கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரிமா சங்கம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. இதில் அரிமா சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் வேதமணி, பொருளாளர் சபரிநாதன், முன்னாள் தலைவர் நாராயணசாமி, உறுப்பினர்கள் ஜெயக்குமார், சின்னத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story