கோவை அருகே கடை வீதிகளில் சுற்றித்திரிந்த காட்டுயானை


கோவை அருகே கடை வீதிகளில் சுற்றித்திரிந்த காட்டுயானை
x
தினத்தந்தி 21 Oct 2017 10:45 PM GMT (Updated: 21 Oct 2017 9:52 PM GMT)

கோவை அருகே கடை வீதிகளில் சுற்றித்திரிந்த காட்டுயானை

துடியலூர்,

கோவை சின்னத்தடாகம் அருகே வீரபாண்டிபுதூர், வீரபாண்டி, தடாகம் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக ஒற்றை காட்டுயானை ஊருக்குள் நுழைந்து செங்கல் சூளை மற்றும் தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதுகுறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் வந்து, காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை சின்னதடாகம் பகுதிக்குள் நுழைந்த, ஒரு காட்டுயானை பஸ் நிலையம், கடை வீதிகளில் சுற்றித்திரிந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்த வனத்துறையினர், பொதுமக்களுடன் இணைந்து பட்டாசு வெடித்து காட்டுயானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனர். 

Next Story