மார்த்தாண்டம் அருகே வீட்டின் மீது மோதிய கன்டெய்னர் லாரி

மார்த்தாண்டம் அருகே வீட்டின் மீது மோதிய கன்டெய்னர் லாரி
x
தினத்தந்தி 28 Oct 2017 10:30 PM GMT (Updated: 28 Oct 2017 5:06 PM GMT)

மார்த்தாண்டம் அருகே விரிகோடு முண்டவிளையை சேர்ந்தவர் முருகேசன். இவரது வீடு சாலையோரம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம்போல் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே விரிகோடு முண்டவிளையை சேர்ந்தவர் முருகேசன். இவரது வீடு சாலையோரம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம்போல் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் சாங்கையில் இருந்து முண்டவிளை வழியாக ஒரு கன்டெய்னர் லாரி புறப்பட்டு சென்றது. அது முருகேசன் வீட்டின் அருகே சென்றபோது, வீட்டின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. உடனே, டிரைவர் வண்டியில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.

வீட்டில் தூங்கி கொண்டிருந்த முருகேசன் சத்தம் கேட்டு வெளியே வந்தார். அப்போது, வீட்டின் மீது கன்டெய்னர் லாரி மோதி நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாரியின் உரிமையாளர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

Next Story