சென்னை விமான நிலையத்தில் வாலிபரிடம் சூட்கேஸ் திருட்டு


சென்னை விமான நிலையத்தில் வாலிபரிடம் சூட்கேஸ் திருட்டு
x
தினத்தந்தி 28 Oct 2017 9:30 PM GMT (Updated: 28 Oct 2017 7:46 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் மராட்டிய மாநில வாலிபரிடம் சூட்கேஸ் திருட்டு.

ஆலந்தூர், 

மராட்டிய மாநிலம் புனேவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 19 பேர் ஒரு குழுவாக அந்தமான் செல்ல நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு உள்ள கேன்டினில் சாப்பிட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டபோது, அவர்களில் ஒருவரது சூட்கேஸ் மாயமாகி விட்டது. அதில் ரூ.3 ஆயிரம் சில ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு பதிவான காட்சிகளை கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது, வாலிபர் ஒருவர் சூட்கேசை திருடி செல்வது பதிவாகி இருந்தது. அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story