‘செல்பி’ எடுத்தபோது ஆற்றில் தவறி விழுந்த நடனக்கலைஞர் தீயணைப்பு துறையினர் மீட்டனர்


‘செல்பி’ எடுத்தபோது ஆற்றில் தவறி விழுந்த நடனக்கலைஞர் தீயணைப்பு துறையினர் மீட்டனர்
x
தினத்தந்தி 28 Oct 2017 10:45 PM GMT (Updated: 28 Oct 2017 7:57 PM GMT)

சென்னை சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்த நடனக்கலைஞர் ‘செல்பி’ எடுத்தபோது ஆற்றில் தவறி விழுந்தார்.

சென்னை, 

சென்னை சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 22). நடனக்கலைஞர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்று விட்டு திரும்பும் போது திரு.வி.க. பாலத்தில் வைத்து ‘செல்பி’ எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி ஆற்றில் விழுந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் முனீஸ்வரன் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த மயிலாப்பூர் தீயணைப்பு படை வீரர்கள் கயிறு மூலம் சீனிவாசனை மீட்டனர். இரவு நேரத்தில் ‘செல்பி’ எடுத்த சீனிவாசனை போலீசார் எச்சரித்து அனுப்பினர். 

Next Story