தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சுங்க வரித்துறை அதிகாரி பணி இடைநீக்கம் கமி‌ஷனர் உத்தரவு


தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சுங்க வரித்துறை அதிகாரி பணி இடைநீக்கம் கமி‌ஷனர் உத்தரவு
x
தினத்தந்தி 28 Oct 2017 9:51 PM GMT (Updated: 28 Oct 2017 9:51 PM GMT)

தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சுங்க வரித்துறை மக்கள் தொடர்பு அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சுங்க வரித்துறை மக்கள் தொடர்பு அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தங்க கடத்தல்

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சம்பவத்தன்று துபாயில் இருந்து விமானத்தில் வந்த மும்பை கலினாவை சேர்ந்த நிலோப்டல் என்ற பயணியிடம் சந்தேகத்தின் பேரில் சுங்கவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் அவர் சட்டவிரோதமாக கொண்டு வந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்க கட்டிகள், செல்போன்கள், சிகரெட் பண்டல்கள், வாசனை திரவியங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரை சகார் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணி இடைநீக்கம்

இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், பொருட்களை கடத்தி கொண்டு வருவதற்கு சுங்கஅதிகாரி ஒருவர் உடந்தையாக செயல்பட்டு வந்தது தெரிவித்தார். இது தொடர்பாக சுங்கவரித்துறை கமி‌ஷனர் ஜே.எஸ். சூரி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் சுங்க வரித்துறை மக்கள் தொடர்பு அதிகாரி ஜலாஜ் மால்வியா கடத்தலில் ஈடுபட்டவருக்கு உடந்தையாக இருந்தது உறுதியானது. இதையடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்து கமி‌ஷனர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.


Next Story