சுரண்டை அருகே பிளஸ்–1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை பள்ளிக்கூடத்துக்கு விடுப்பு எடுத்ததை தாயார் கண்டித்ததால் விபரீத முடிவு


சுரண்டை அருகே பிளஸ்–1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை பள்ளிக்கூடத்துக்கு விடுப்பு எடுத்ததை தாயார் கண்டித்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 29 Nov 2017 8:45 PM GMT (Updated: 29 Nov 2017 3:41 PM GMT)

சேர்ந்தமரம் அருகே, பள்ளிக்கூடத்துக்கு விடுப்பு எடுத்ததை தாயார் கண்டித்ததால், பிளஸ்–1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுரண்டை,

சேர்ந்தமரம் அருகே, பள்ளிக்கூடத்துக்கு விடுப்பு எடுத்ததை தாயார் கண்டித்ததால், பிளஸ்–1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்–1 மாணவி

சேர்ந்தமரம் அருகே, கடம்பன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணையா. இவருடைய மனைவி லட்சுமி. பீடி சுற்றும் தொழிலாளி. இவர்களுடைய மகள் சங்கீதா(வயது17). இவர், சேர்ந்தமரத்திலுள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்–1 படித்து வந்தார்.

தாயார் கண்டிப்பு

இந்த நிலையில், இவர் அடிக்கடி விடுப்பு எடுத்து கொண்டு பள்ளிக்கூடம் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதை அவ்வப்போது தாயார் லட்சுமி கண்டித்து வந்துள்ளார். பள்ளிக்கூடம் சென்று படிக்குமாறு மகளுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் காலையிலும் விடுப்பு எடுத்து கொண்டு பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் சங்கீதா வீட்டில் இருந்துள்ளார். இதை கண்டித்த தாயார், பள்ளிக்கூடத்துக்கு செல்லுமாறு கூறிவிட்டு, பீடிக்கடைக்கு வேலைக்கு சென்று விட்டாராம்.

தூக்கு போட்டு தற்கொலை

சிறிது நேரத்தில் வீட்டில் சேலையால் சங்கீதா தூக்கு மாட்டி தொங்கியுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சுரண்டையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்து போனார். அவருடைய உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இது குறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story