நர்சுகளுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நர்சுகளுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2017 10:45 PM GMT (Updated: 29 Nov 2017 7:23 PM GMT)

அரசு மருத்துவமனைகளில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல்,

அரசு மருத்துவமனைகளில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு அரசு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு, மாவட்ட தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். செயலாளர் முபாரக் அலி கோரிக்கைகளை விளக்கி பேசினார். முடிவில் பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Next Story