வன்கொடுமை தடுப்பு பற்றிய கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


வன்கொடுமை தடுப்பு பற்றிய கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 22 Dec 2017 4:45 AM IST (Updated: 22 Dec 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

வன்கொடுமை தடுப்பு பற்றிய கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016-ன்படி திருவள்ளூர் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்த கூட்டத்தில் அரசு விதிகளின் படி இன்னலுற்றோர் மற்றும் சாட்சிகளுக்கு நிதி கிடைப்பதற்கான உரிமையை நிலைநாட்டுதல் , வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீர்வு மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகள் குறித்தும் சட்டத்தை செயல் படுத்தும் பல்வேறு அலுவலர்கள், அமைப்புகளின் பங்குகள் மற்றும் பணியின் செயல்பாடுகள் குறித்தும் மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் மேம்படுத்துதல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள்

மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டு நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்தும் திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்படி சட்டப்பிரிவின் கீழ் பதியப்படும் வழக்குளில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள போலீசார் மற்றும் அரசு வக்கீல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சக்திவேல் மற்றும் திரளான அரசு அலுவலர்கள், போலீசார், வக்கீல்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story