மார்த்தாண்டம் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கிள்ளியூர் ஒன்றிய பகுதிகளை இணைக்க வேண்டும்


மார்த்தாண்டம் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கிள்ளியூர் ஒன்றிய பகுதிகளை இணைக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 Dec 2017 11:00 PM GMT (Updated: 29 Dec 2017 7:10 PM GMT)

குமரி மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் முறைசாரா தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகர்கோவில்,

விளவங்கோடு தொகுதி விஜயதரணி எம்.எல்.ஏ. ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

குமரி மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் முறைசாரா தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கான நல வாரியம் நாகர்கோவிலில் செயல்பட்டு வந்தது. நான் பல முறை சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் விளவங்கோடு தாலுகா மக்கள் பயன் பெறும் வகையில் மார்த்தாண்டத்தில் புதிய தொழிலாளர் நலத்துறை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதில் மார்த்தாண்டத்தை ஒட்டியுள்ள கிள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களையும் மார்த்தாண்டம் அலுவலகத்தோடு இணைக்க வேண்டும். இதேபோல் அருகில் உள்ள உண்ணாமலைக்கடை, நல்லூர் பேரூராட்சி, நட்டாலம், கொல்லஞ்சி ஊராட்சிகளையும் இணைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story