நெல்லையில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை


நெல்லையில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 30 Dec 2017 9:00 PM GMT (Updated: 30 Dec 2017 1:15 PM GMT)

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லையில் ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை,

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லையில் ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் நெல்லை மாவட்ட பிரிவு சார்பில், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூட்டமைப்பு தலைவர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். சிவகாமிநாதன் முன்னிலை வகித்தார். அமைப்பாளர் சண்முக சுந்தரராஜ் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.

ஊதிய முரண்பாடு

தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கும் இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும். மத்திய அரசு வழங்கியது போல் 1–1–2016 முதல் 30–9–2017 வரை உள்ள நிலுவை தொகையை வழங்க வேண்டும். தமிழக அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அனைத்து நோய்களுக்கும், அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோ‌ஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் சீதாராமன், பி.டி.சிதம்பரம், கதிர்வேல் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பை சேர்ந்த பாலசுப்பிரமணியன், ராஜகோபால், சிவசுப்பு, பன்னீர் செல்வம், ஜி.கிருஷ்ணன், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story