புதுக்கோட்டை அருகே சைக்கிள் கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை


புதுக்கோட்டை அருகே சைக்கிள் கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 Dec 2017 8:30 PM GMT (Updated: 30 Dec 2017 3:54 PM GMT)

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி வேதகோவில் தெருவை சேர்ந்தவர் பொன்பாண்டியன் (வயது 55).

தூத்துக்குடி,

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி வேதகோவில் தெருவை சேர்ந்தவர் பொன்பாண்டியன் (வயது 55). கூட்டாம்புளி மெயின் ரோட்டில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடந்தி வந்தார்.

இவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். பொன்பாண்டியன் வழக்கமாக சைக்கிள் கடையில் தூக்குவாராம். இதற்கிடையே கடந்த சில நாட்களாக அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் பொன்பாண்டியனின் 2–வது மகள் சோபனா தனது தந்தையை பார்ப்பதற்காக சைக்கிள் கடைக்கு சென்றார். அப்போது கடையில் பொன்பாண்டியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் உடல் கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொன்பாண்டியன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story