சமூகத்திற்காக தன்னையே அர்ப்பணித்தவர் அன்னைதெரசாவுக்கு, நாராயணசாமி புகழாரம்


சமூகத்திற்காக தன்னையே அர்ப்பணித்தவர் அன்னைதெரசாவுக்கு, நாராயணசாமி புகழாரம்
x
தினத்தந்தி 30 Dec 2017 11:30 PM GMT (Updated: 30 Dec 2017 7:50 PM GMT)

புதுவை அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் அன்னைதெரசா வெண்கல சிலை திறப்பு, சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

புதுச்சேரி,

புதுவை அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் அன்னைதெரசா வெண்கல சிலை திறப்பு, சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்–அமைச்சர் நாராயணசாமி விழா மலரை வெளியிட்டார். விழாவில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., புதுச்சேரி–கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர், பிரதிநிதி ஜோசப் அதிரியன் ஆண்டோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசுகையில், ‘ஏசுவின் போதனைகளை தனது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியவர் அன்னைதெரசா. ஊனமுற்றவர்கள், ஆதரவற்றவர்கள் மீது அன்பு செலுத்தியவர். அவர் சமூகத்திற்காக தன்னையே அர்ப்பணித்தவர். அவரை கவுரவிப்பதால் நாமும் கவுரவமடைகிறோம்’ என்றார். கலை, பண்பாட்டுத்துறை இயக்குனர் கணேசன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story