காட்டுமன்னார்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்


காட்டுமன்னார்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Dec 2017 9:30 PM GMT (Updated: 30 Dec 2017 8:30 PM GMT)

காட்டுமன்னார்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களிடையே பிரிவினையை தூண்டும் சாதிய மதவாத சக்திகளை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் மணவாளன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமலிங்கம், ரவி, பாலா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி துணை செயலாளர் ராவணன் வரவேற்றார். சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம்மாநில செயலாளர் பசுமைவளவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் நிர்வாகிகள் வெற்றிவேந்தன், செல்வகுமார், ராஜலட்சுமி, இக்பால்அசேன், அந்தோணிசிங், செந்தில்குமார், பன்னீர்செல்வம், கார்த்திகேயன், ராஜேந்திரன், பிரபு, வில்லியம்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story