ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 21½ பவுன் நகை திருட்டு
ஊரப்பாக்கம் ஜெகதீஸ் நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 21½ பவுன் நகை திருட்டு போனது.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் ஜெகதீஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 59). இவர், கடந்த 20-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 21½ பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுபற்றி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். காஞ்சீபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்களும் வந்து வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story