மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வை 2,657 பேர் எழுதினர்


மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வை 2,657 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 29 April 2018 10:30 PM GMT (Updated: 29 April 2018 8:59 PM GMT)

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வை 2,657 பேர் எழுதினர்.

திருவாரூர்,

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இந்தியா முழுவதும் 11 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக் கழகங்களில் நடப்பு ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான பொது நுழைவு தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வுகளை நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் மாணவ- மாணவிகள் எழுதினர்.

அதன்படி திருவாரூர் அருகே நீலக்குடியில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நுழைவு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி உள்ளிட்ட கல்வி பிரிவுகளில் சேர்வதற்காக 2,657 மாணவ-மாணவிகள் நேற்று நுழைவு தேர்வு எழுதினர்.

Next Story