20-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு இந்திரா நர்சிங் ஹோமில் இலவச அறுவைசிகிச்சைக்கு பரிசோதனை முகாம்


20-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு இந்திரா நர்சிங் ஹோமில் இலவச அறுவைசிகிச்சைக்கு பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 29 April 2018 10:15 PM GMT (Updated: 29 April 2018 9:52 PM GMT)

வேலூர் இந்திரா நர்சிங் ஹோமின் 20-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இலவச அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

வேலூர்,

வேலூர் சைதாப்பேட்டை மெயின் பஜார் ரோட்டில் இந்திரா நர்சிங் ஹோம் உள்ளது. இதன் 20-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்திலும், காப்பீடு திட்டத்தில் இல்லாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு சலுகை கட்டணத்தில் அறுவை சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.

முகாமிற்கு இந்திரா நர்சிங் ஹோம் இயக்குனர் டாக்டர் பி.சங்கர் தலைமை தாங்கி நோயாளிகளை பரிசோதனை செய்தார். கர்ப்பப்பை பிரச்சினைக்கு டாக்டர் லதாலட்சுமி, முதுகுதண்டு பிரச்சினைக்கு டாக்டர் முகமதுகவுஸ், பொதுமருத்துவத்திற்கு டாக்டர்கள் கரண், சிவரஞ்சனி, சாலமன், ஸ்ரீதர், கார்த்திக் ஆகியோர் பரிசோதனைசெய்து ஆலோசனை வழங்கினர். சிலருக்கு இலவசமாக ஸ்கேன் செய்யப்பட்டது.

மூலம், குடலிறக்கம், விரைவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், சிறுநீரக கற்களால் அவதிப் படுபவர்கள், கர்ப்பப்பை கட்டிகள், சினைப்பை கட்டிகள், அடி இறங்குதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களும் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

தீராத கழுத்துவலி, முதுகுதண்டுவலி, இடுப்பு வலி, கால்களில் குடைச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பப்பை வாய்புற்றுநோய் பரிசோதனையும் செய்யப்பட்டது.

முகாமில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 700 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சையளிக்கப்பட்டது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்திரா நர்சிங்ஹோம் இயக்குனர் டாக்டர் பி.சங்கர் செய்திருந்தார்.

Next Story