ஸ்டேட் வங்கியில் 2000 அதிகாரி பணிகள்


ஸ்டேட் வங்கியில் 2000 அதிகாரி பணிகள்
x
தினத்தந்தி 30 April 2018 7:39 AM GMT (Updated: 30 April 2018 7:39 AM GMT)

ஸ்டேட் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் வங்கி. நாடுமுழுவதும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் தற்போது புரபெசனரி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 1010 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 540 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 300 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 150 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-4-2018-ந் தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர் களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர் களாகவும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர் 2-4-1988 மற்றும் 1-4-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இரு தேர்வுகளாக நடைபெறும்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்தாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 13-5-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

முக்கிய தேதிகள்

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் : ஜூலை 1,7,8-ந் தேதிகள்

முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்: 4-8-2018-ந் தேதி

நேர்காணல் நடைபெறும் நாள்: 24-9-18 முதல் 12-10-2018-ந் தேதி வரை இடைப்பட்ட குறித்த நாட்களில்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.sbi.co.inஎன்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

Next Story