வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத 2 ஆண் பிணங்கள் போலீசார் விசாரணை


வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத 2 ஆண் பிணங்கள் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 May 2018 3:45 AM IST (Updated: 16 May 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

பேரளம் அருகே வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத 2 ஆண் பிணங்கள் கிடந்தன. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பேரளம் ரெயில்வே பிளாட்பாரத்தில் நேற்று காலை அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் விவேக், பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை

இதேபோல பேரளம் அருகே உள்ள திருக்கொட்டாரம் ஊராட்சி மேலபருத்திக்குடி மதகு பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் பிணம் கிடந்தது. இதுபற்றி அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story