முப்பந்தல் அருகே ஆற்று மணல் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல் 4 பேர் கைது


முப்பந்தல் அருகே ஆற்று மணல் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2018 10:15 PM GMT (Updated: 12 Jun 2018 8:55 PM GMT)

முப்பந்தல் அருகே ஆற்று மணல் கடத்தி வந்த 2 லாரியை பறிமுதல் செய்து 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆரல்வாய்மொழி,

திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டத்தில் இருந்து ஆற்று மணலை திருடி குமரி மற்றும் கேரளாவுக்கு கடத்தி வருகிறார்கள்.

இதை தடுக்க சிறப்பு படை அமைக்கப்பட்டு தீவிரமாக மணல் கடத்தலை கண் காணித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் மணல் கடத்தல் தடுப்பு சப்- இன்ஸ் பெக்டர் திலீபன் தலைமையில், ஏட்டுகள் ராபட்சிங், செல்வன், சுதாகர், ராமதாஸ் ஆகியோர் முப்பந் தல் பகுதியில் நேற்று காலை 7 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மணல் கடத்தல்

அப்போது, அந்த வழியாக அடுத்தடுத்து 2 லாரிகள் வந்தது. அதில் முதலில் வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்தனர். அதில் எம் சாண்ட் கொண்டு செல்லும் அனுமதி இருந்தது. ஆனால் லாரியில் ஆற்று மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல் பின்னால் வந்த மற்றொரு டாரஸ் லாரியை நிறுத்தினார்கள். லாரி முழு வதும் தார் பாயால் மூடப்பட்டு பிரபல சிமெண்டு தொழிற் சாலையில் ஸ்டிக்கர்கள் ஒட் டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் லாரியின் மேல்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் திருச்சி பகுதி யில் இருந்து ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதைதொடர்ந்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், அவர்களிடம் இருந்த ரூ.52 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

4 பேர் கைது

பின்னர், லாரியின் டிரைவ ரான உண்ணாமலைக் கடையை சேர்ந்த சசிகுமார் (வயது 40), கிளனரான திக்குறிச்சி குத்துவிளையை சேர்ந்த சந்திரகுமார், மற் றொரு லாரியின் டிரைவரான மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுப்பகுளத்தை சேர்ந்த நெல்சன்குமார்(37), கிளனரான சிதறால் வட்ட விளையை சேர்ந்த ரமேஷ்(38) ஆகிய 4 பேரை கைது செய்த னர்.

மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story