திருவள்ளூர் அருகே லாரி மோதி வாலிபர் சாவு


திருவள்ளூர் அருகே லாரி மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 20 Jun 2018 3:30 AM IST (Updated: 20 Jun 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே லாரி மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் டிப்புமஞ்சினி (வயது 23). ஒடிசா மாநிலம் பானி கிராமத்தை சேர்ந்தவர். நேற்று முன்தினம் டிப்புமஞ்சினி வேலை முடித்துவிட்டு தன்னுடைய வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. 

சாவு

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் வலையப்பட்டியை சேர்ந்த பிரபு (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story