கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க கோரிக்கை

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்  பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 20 Jun 2018 9:30 PM GMT (Updated: 20 Jun 2018 7:12 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி, 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவிகளை கைது செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஞானசேகர், நகர செயலாளர் சரோஜா, ஒன்றிய செயலாளர்கள் அழகு, வேல்முருகன், பிச்சை, அம்பிகாபதி, கல்யாணசுந்தரம், நிர்வாகிகள் ஆண்டி, செல்வராஜ், மாணிக்கம், பரமராஜ், சேதுராமலிங்கம், முனியசாமி, அலாவுதீன், செல்லையா, ஜோசப் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

Next Story