சுங்குவார்சத்திரம் அருகே போலீஸ்காரர் கொலை வழக்கில் 2 பேர் கைது
சுங்குவார்சத்திரம் அருகே போலீஸ்காரர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலாஜாபாத்,
சுங்குவார்சத்திரம் அருகே போலீஸ்காரர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் முதுநிலை போலீசாக பணிபுரிந்து வந்தவர் வேலூர் மாவட்டம் பொய்கை நல்லூரை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 42). இவர் சுங்குவார்சத்திரத்தை அடுத்த திருமங்கலம் கண்டிகையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதை தொடர்ந்து காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி தேன்மொழி மற்றும் எஸ்.பி சந்தோஷ் ஹாதிமானி ஆகியோர் நேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கொலை குற்றவாளிகளை விரைந்து பிடிக்க எஸ்.பி. சந்தோஷ் ஹாதிமனி தலைமையில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டு, 7 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் 45 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தினந்தோறும் பள்ளி வளாகத்தில் மது அருந்த வரும் திருமங்கலம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (24) மற்றும் எல்லப்பன் (25) ஆகியோரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பள்ளி வளாகத்தில் மது அருந்துவதை மோகன்ராஜ் தட்டிக் கேட்டதால் அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து சுங்குவார்சத்திரம் போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டு உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story