வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்திய வழக்கில் 3 பேர் கைது மேலும் ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்

வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்திய வழக்கில் 3 பேர் கைது மேலும் ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்
x

வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்த வழக்கில் 3 பேரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் ரூ.1 கோடி போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

மும்பை, ஜூலை.21

வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்த வழக்கில் 3 பேரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் ரூ.1 கோடி போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

ரூ.3.40 கோடி

மும்பையில் உள்ள கூரியர் நிறுவனத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து வந்த பார்சலில் போதைப்பொருள் கடத்தி கொண்டு வரப் பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்திற்கு சென்று அங்கிருந்த பார்சல்களை பிரித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில், ரூ.3 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

3 ேபர் கைது

இது தொடர்பாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து அமீர் அப்துல் ரசாக் என்பவர் கைதானார். இவர் எத்தியோப்பியா நாட்டில் இருந்து போதைப்பொருளை கடத்தி கொண்டு வந்ததாகவும், மும்பை வழியாக டெல்லிக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில், இந்த கடத்தலில் தொடர்புடைய டெல்லியை சேர்ந்த அப்துல் அஜிஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இந்த சம்பவத்தில் அகமது மிராய் என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் கைதானவர்களிடம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story