கடலூரில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்துமிடத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் நகரம் மற்றும் மாவட்டத்தில் ஆட்டோக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சாலை விபத்துகளும் நடக்கின்றன. எனவே ஆட்டோக்களுக்கு ’பெர்மிட்’ வழங்குவதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் சாலை போக்குவரத்து மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஆட்டோ தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் முத்து தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் கருப்பையன், மாவட்ட தலைவர் பாஸ்கரன், துணைத்தலைவர் ஜீவா, ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் பாபு, பொருளாளர் நவநீத கிருஷ்ணன், ஸ்டாலின் உள்ளிட்டோர் கோரிக்கையை விளக்கி பேசினார்கள். இதில் ஆட்டோ டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.