தியேட்டரில் நண்பனை குத்திக்கொன்றது ஏன்? கைதான வாலிபர் வாக்குமூலம்


தியேட்டரில் நண்பனை குத்திக்கொன்றது ஏன்? கைதான வாலிபர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 1 Aug 2018 3:45 AM IST (Updated: 1 Aug 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணத்தில் தியேட்டரில் நண்பனை மதுபாட்டிலால் குத்தி கொன்றது ஏன்? என்று வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 22). அதே ஊரைச் சேர்ந்தவர் சிவா (22). 2 பேரும் நண்பர்கள். இவர்கள் காவேரிப்பட்டணத்தில் தியேட்டர் ஒன்றில் படம் பார்க்க சென்றனர். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் தான் கையில் வைத்திருந்த மதுபாட்டிலால், மாணிக்கத்தை சிவா கழுத்தில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த மாணிக்கம் இறந்தார். இந்த கொலை தொடர்பாக சிவாவை காவேரிப்பட்டணம் போலீசார் தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் வீட்டின் அருகே ஆஞ்சநேயர் கோவில் அருகில் சிவாவை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

என்னை மாணிக்கம் பட்டப்பெயர் சொல்லி கூப்பிட்டு கேலி-கிண்டல் செய்து வந்தான். இதனால் எனக்கு அவன் மீது ஆத்திரம் இருந்தது. தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த போதும் அவ்வாறு கூறினான். இதனால் ஆத்திரத்தில் நான் மதுபாட்டிலை உடைத்து அவனது கழுத்தில் குத்தினேன். இவ்வாறு அவர் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான சிவாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story