மாவட்ட செய்திகள்

மாயவன் கோவிலில் உண்டியல் திருட்டு + "||" + The plagiarism of the Maya temple

மாயவன் கோவிலில் உண்டியல் திருட்டு

மாயவன் கோவிலில் உண்டியல் திருட்டு
அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்துள்ள அங்கனூர் கிராமத்தில் மாயவன் கோவில் உள்ளது. நேற்று காலை கோவில் பூசாரி கோவிலுக்கு சென்று பார்த்த போது, அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்துள்ள அங்கனூர் கிராமத்தில் மாயவன் கோவில் உள்ளது. இந்த கோவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் குல தெய்வ கோவில் ஆகும். இக்கோவில் கடந்த மாதம் திருப்பணிகள் நடந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிலையில் நேற்று காலை கோவில் பூசாரி கோவிலுக்கு சென்று பார்த்த போது, அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து பூசாரி பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.