மாவட்ட செய்திகள்

திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் திருச்சி வழியாக இயக்கம் + "||" + Special trains from Ernakulam to Velankanni will be diverted via Trichy

திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் திருச்சி வழியாக இயக்கம்

திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் திருச்சி வழியாக இயக்கம்
திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு திருச்சி, தஞ்சை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
திருச்சி,

திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண் 06046) வருகிற 29-ந் தேதி, அடுத்த மாதம் 5-ந் தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். வேளாங்கண்ணியில் இருந்து (வண்டி எண் 06045) வருகிற 30-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 6-ந் தேதிகளில் இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரெயில் குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.


இதேபோல எர்ணாகுளத்தில் இருந்து (வண்டி எண் 06016) வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில் வருகிற 28, 31-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 4 மற்றும் 7-ந் தேதிகளில் இரவு 11 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் பகல் 1 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். வேளாங்கண்ணியில் இருந்து (வண்டி எண் 06015) வருகிற 29-ந் தேதி, அடுத்த மாதம் 5, 9 ஆகிய நாட்களில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 1.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரெயில் ஆலுவா, திரிசூர், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களுக்கு முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.