ரூ.1 கோடியே 89 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


ரூ.1 கோடியே 89 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Aug 2018 5:25 AM IST (Updated: 10 Aug 2018 5:25 AM IST)
t-max-icont-min-icon

விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 89 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரவுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது தங்கம் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அதிகாரிகள் விமானத்தில் ஏறி சோதனை மேற்கொண்டனர்.

இதில், பயணி ஒருவரின் இருக்கைக்கு கீழே பிளாஸ்டிக் டேப்பினால் ஒட்டிவைக்கப்பட்ட நிலையில் தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளின் மதி்ப்பு ரூ.1 கோடியே 89 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கம் கடத்தி வந்த பயணியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story