மாவட்ட செய்திகள்

மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு, கலெக்டரிடம் புகார் + "||" + Fisher Women Co-operative Society's election abuse, Report to the Collector

மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு, கலெக்டரிடம் புகார்

மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு, கலெக்டரிடம் புகார்
மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்திற்கு முறைகேடாக நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்து முறையான தேர்தல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவாடானை தாலுகா பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

தொண்டி,

திருவாடானை தாலுகா நம்புதாளை விநாயகர் நகர் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்திற்கு நிர்வாக குழு உறுப்பினர் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்படிருந்தது. அதன் அடிப்படையில் 7 நபர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ததற்கான எந்தவித ஒப்புகை சீட்டும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 9–ந்தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் நடத்தாமலேயே இந்த சங்கத்திற்கான நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் நம்புதாளை விநாயகர் நகர் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்திற்கு முறைகேடாக நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்து முறையான தேர்தல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. கோபியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது; கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்
கோபியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தனர்.
2. தனியார் நிதி நிறுவனம் ரூ.350 கோடி மோசடி; குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனம் ரூ.350 கோடி மோசடி செய்து விட்டதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏஜெண்டுகள் புகார் தெரிவித்தனர்.
3. கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம் நடத்த முடிவு
கீழக்கரையில் நேற்று மீனவர்களின் போராட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
4. மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் மீது கேரள மாணவி பாலியல் புகார்; விசாரணை குழு முன்பு ஆஜரானார்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்மலாதேவி விவகாரம் புயலை கிளப்பிய நிலையில், தற்போது கேரளாவை சேர்ந்த மாணவி பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக விசாரணை குழு முன்பு நேற்று அந்த மாணவி ஆஜரானார்.
5. பாகிஸ்தான் ஆக்கி அணியின் பயிற்சியாளர் மீது புகார்
உதவி பயிற்சியாளர் டேனிஷ் கலீம் அடையாள அட்டை இல்லாமல் வீரர்கள் இருக்கும் இடத்துக்கு செல்ல முயன்ற போது பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்ததாகவும், அவர்களிடம் அதிகார தோரணையில் நடந்து கொண்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.