38 மொழிகளில் அர்த்தம் கூறும் ஆப்! யு டிக்‌ஷ்னரி


38 மொழிகளில் அர்த்தம் கூறும் ஆப்! யு டிக்‌ஷ்னரி
x
தினத்தந்தி 22 Aug 2018 6:47 AM GMT (Updated: 22 Aug 2018 6:47 AM GMT)

ஒரு வாக்கியத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக யு டிக்‌ஷ்னரி எனும் செயலி வந்துள்ளது.

செல்போன்கள் இப்போது பல வகையிலும் பயனுள்ளதாகி வருகிறது. அதிலும் குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் வந்த பிறகு இடத்தைக் கண்டுபிடிப்பது (மேப்), பொருட்களை ஆன்லைனில் வாங்குவது, அதற்கான தொகையை ஆன்லைனிலேயே செலுத்துவது என இதன் பயன்கள் பரந்து விரிந்து கொண்டே போகின்றன. கால்குலேட்டர், வானிலை உள்ளிட்ட பல வசதிகள் பழைய சமாச்சாரம். இப்போது ஒரு வாக்கியத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக யு டிக்‌ஷ்னரி எனும் செயலி வந்துள்ளது.

இந்த செயலி மூலம் 38 மொழிகளில் உள்ள வாக்கியங்களின் அர்த்தத்தை அறிந்து கொள்ள முடியும். இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் ஆன்லைனில் அதாவது இணைய இணைப்பில் இல்லாவிட்டாலும் அர்த்தத்தை தெரிந்துகொள்ள முடியும் என்பது இதன் சிறப்பாகும். ஆப்டிகல் கேரக்டர் ரிகக்னிஷன் அதாவது ஒரு வார்த்தையின் வடிவமைப்பை புரிந்து அதற்கான அர்த்தத்தை அளிக்கும் தொழில்நுட்பம் (ஓசிஆர்) இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வாக்கியத்தை அப்படியே ஸ்மார்ட்போன் கேமராவில் பதிவு செய்து அனுப்பினால் உடனடியாக அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள முடியும். பொதுவாக ஸ்மார்ட்போனில் பிரவுஸ் செய்யும்போது புரியாத பல விஷயங்கள் உங்களை குழப்பும். அதற்கு உடனுக்குடன் விளக்கம் பெற இந்த செயலி உதவும். மேலும் ஆங்கில வார்த்தை உச்சரிப்பு அமெரிக்காவில் எவ்விதம் உச்சரிக்கப்படும், இங்கிலாந்தில் எவ்விதம் உச்சரிக்கப்படும் என்பதையும் இதன் மூலம் கேட்டறிய முடியும். வார்த்தை, வாக்கியம் ஆகியவற்றின் பொருளை அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ள செயலி இது.

Next Story