களையெடுக்கும் ரோபோ


களையெடுக்கும் ரோபோ
x
தினத்தந்தி 22 Aug 2018 12:56 PM IST (Updated: 22 Aug 2018 12:56 PM IST)
t-max-icont-min-icon

வீட்டுத் தோட்டங்களுக்குப் பயன்படும் வகையில் களையெடுக்கும் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

விவசாயப் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை எல்லா நாட்டிலும் நிலவுகிறது. இந்தியா மிகப்பெரிய விவசாய நாடு, ஆனாலும் இங்கும் விவசாயத்தை விட்டுவிட்டு பலரும் வேறு வேலைக்கு செல்லத் தொடங்கிவிட்டதால் கிராமங்களில் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது.

இப்போது நிலத்தை உழவு செய்ய டிராக்டர் பயன்படுத்துவது மட்டுமின்றி, அறுவடைப் பணிகளுக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

அந்த வரிசையில் வீட்டுத் தோட்டங்களுக்குப் பயன்படும் வகையில் களையெடுக்கும் ரோபோவை உருவாக்கியுள்ளனர். சூரிய ஆற்றலில் செயல்படும் இது, தோட்டத்தில் பெரியதாக வளர்ந்திருப்பவை செடி கள், சிறிதாக இருப்பவை களைகள் என்பதை அறிந்து அவற்றை மட்டும் கத்தரித்துவிடும். நல்ல செடிகளும் சிறிய அளவில் வளர்ந்திருந்தால் அதைச் சுற்றி கம்பிவேலி போட்டு இருந்தால், இந்த ரோபோ அதைச் சுற்றி சென்றுவிடும். புளூடூத் வழி யாக ஸ்மார்ட் போனுடன் இணைத்து இதை செயல்படுத்தலாம்.

‘டெர்டில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த களையெடுக்கும் ரோபோ, வயல் வரப்பை எல்லையாகக் கொண்டு செயல்படும். இது வீட்டுத் தோட்டங்களுக்கு ஏற்றது.

Next Story