பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை


பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 22 Aug 2018 9:45 PM GMT (Updated: 22 Aug 2018 9:45 PM GMT)

திருப்பூரில், பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர், 


முஸ்லிம்களின் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து முஸ்லிம்கள் நேற்று காலை பள்ளிவாசல்களுக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தினார்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இஸ்லாமிய பிரசார பேரவையின் சார்பில் பக்ரீத் பண்டிகையையொட்டி திடல் தொழுகை நேற்று காலை திருப்பூர் செல்லாண்டியம்மன் துறையில் உள்ள டிட்டி வளாகத்தில் நடைபெற்றது.

மாநில தலைமை கழக பேச்சாளர் ரபீக், மாவட்ட தலைவர் நசீருதீன், துணைத்தலைவர் சித்திக், துணை செயலாளர் சர்புதீன் உள்பட ஆண்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் கோம்பைத்தோட்டம், வி.எஸ்.நகர், எஸ்.வி.காலனி பகுதியில் கூட்டு குர்பாணி நடந்தது. இதில் ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு இறைச்சி, உணவுப்பொருட்கள் குர்பாணியாக கொடுக்கப்பட்டது.

இதுபோல் முஸ்லிம் அமைப்பு சார்பில் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளாக ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினார்கள். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி அருகே உள்ள மைதானத்தில் நடந்த திடல் தொழுகையில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். 

Next Story