காஞ்சீபுரம் அருகே துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வரவேற்பு


காஞ்சீபுரம் அருகே துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 3 Sep 2018 10:15 PM GMT (Updated: 3 Sep 2018 7:58 PM GMT)

தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து கார் மூலம் வேலூர் சென்றார்.

காஞ்சீபுரம்,

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரம் அருகே பொன்னேரிக்கரை என்ற இடத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வீ.வள்ளிநாயகம் உள்பட அ.தி.மு.க.வினர் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் நிருபர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, “முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்ததற்கு அ.தி.மு.க. அரசு காரணம் இல்லை. அ.தி.மு.க. அரசு பற்றி வீண்பழி சுமத்தும் டி.டி.வி.தினகரனுக்கு தக்க சமயத்தில் சரியான பதிலடி கொடுப்போம். அ.தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி. அனைத்து தொண்டர்களும் கட்டுக்கோப்பாக உள்ளனர். அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவோ, உடைக்கவோ முடியாது” என்றார்.

Next Story