நெல்லையில் பாரதியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


நெல்லையில் பாரதியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 11 Sep 2018 10:30 PM GMT (Updated: 11 Sep 2018 10:20 PM GMT)

மகாகவி பாரதியார் நினைவுநாளையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை, 

மகாகவி பாரதியார் நினைவுநாளையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாரதியார் நினைவு நாள்

மகாகவி பாரதியார் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலை அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

காங்கிரசார் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன்(மாநகர்), எஸ்.கே.எம்.சிவகுமார்(கிழக்கு), முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பா.ஜ.க.வினர் மரியாதை

பாரதீய ஜனதா சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ் செல்வன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

பொதிகை தமிழ் சங்கத்தினர் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அகில இந்திய பிராமணர் சங்கம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாணவ-மாணவிகள் உறுதி மொழி

பாரதியார் படித்த ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் அவர் படித்த வகுப்பறையில் உள்ள அவரது படத்திற்கு மாணவ-மாணவிகள், தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதி மொழி ஏற்றனர். இதில் ஆசிரியர்கள் சொக்கலிங்கம், பாலசுப்பிரமணியன், சிவசங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story