மும்பையில் பக்தர்களை கவரும் விதவிதமான விநாயகர் சிலைகள்


மும்பையில் பக்தர்களை கவரும் விதவிதமான விநாயகர் சிலைகள்
x
தினத்தந்தி 11 Sep 2018 10:45 PM GMT (Updated: 11 Sep 2018 10:39 PM GMT)

மும்பையில் பக்தர்களை கவரும் வகையில் விதவிதமான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப் பட்டுள் ளன.

மும்பை, 

மும்பையில் பக்தர்களை கவரும் வகையில் விதவிதமான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப் பட்டுள் ளன.

விநாயகர் சதூர்த்தி விழா

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நாட்டின் மற்ற இடங்களை போல அல்லாமல் மராட்டியத்தில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாநில தலைநகர் மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை பற்றி கேட்கவே தேவையில்லை. அந்த அளவுக்கு மும்பை பெருநகரம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் திளைத்து இருக்கும்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி மும்பை நகரம் இப்போதே விழாக்கோலம் பூண்டு உள்ளது. வருகிற 23-ந்தேதி ஆனந்த சதுர்த்தி வரை கொண்டாட்டம் களை கட்டும்.

லால்பாக் ராஜா

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பக்தர்களால் விநாயகர் ‘ராஜா'வாக வர்ணித்து வணங்கப்படுகிறார். இதில், மும்பையில் பிரதிஷ்டை செய்யப்படும் லால்பாக் ராஜா விநாயகர் சிலை முதன்மை பெற்றதாக விளங்குகிறது.

ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் தாக்கம் விநாயகர் சிலை உருவாக்கத்திலும் காண முடியும். ஏனெனில் ஒவ்ெவாரு மண்டல்களிலும் விதவிதமான தோற்றங்களிலும், பிற கடவுள் அவதாரங்களிலும் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

கடந்த ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தை தூக்கி நிற்கும் பாகுபலி விநாயகர், சிக்ஸ் பேக் விநாயகர் ஆகிய சிலைகள் பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. எனவே மண்டல்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை பார்ப்பதற்கு என்றே மக்கள் படை எடுப்பாார்கள்.

காகித விநாயகர்

இந்த ஆண்டும் சிவன், பெருமாள், முருகன், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள்களின் தோற்றத்திலும், சாய்பாபா, மகாவிஷ்ணுவின் கல்கி அவதார தோற்றத்திலும், விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டைக்காக மண்டல்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

இதேபோல பக்தர்களை கவரும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் விதவிதமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவற்றில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத காகித விநாயகர் சிலை, 155 கிலோ பருப்பினால் ஆன விநாயகர் சிலைகள் குறிப்பிடத்தக்கவை.

இதேபோல விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் பந்தல்களும் பக்தர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. மும்பை செம்பூர் திலக் நகர் மைதானத்தில சயாத்ரி மண்டல் சார்பில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ய ராமர் கோவில் வடிவில் மண்டல் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த மண்டல் முன்னால் பிரமாண்ட ராமர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இது அனைவரையும் வெகுவாக ஈர்த்து உள்ளது.

Next Story