வானவில் : பட்ஜெட் புளூடூத் ஸ்பீக்கர்கள்


வானவில் : பட்ஜெட் புளூடூத் ஸ்பீக்கர்கள்
x
தினத்தந்தி 12 Sep 2018 5:55 AM GMT (Updated: 12 Sep 2018 5:55 AM GMT)

அழகான, நேர்த்தியான வடிவங்களில் மார்க்கெட்டில் பல புளூடூத் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. அதை வாங்கி செல்போனுடன் இணைத்து கொண்டு இனிமையான பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.

அதற்கு போட்ரன் (photron) ஜீ10 வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் ஒரு அருமையான சாய்ஸ்.

கையடக்கமான தோற்றத்தில் இருக்கும் இந்த ஸ்பீக்கர், ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெருசு’ என்பதற்கு சாட்சி. இதில் இருக்கும் 400 எம்.ஏ.எச். பேட்டரி மூன்று மணி நேரம் சார்ஜ் நீடிக்கும் தன்மை உடையது. உள்ளே மைக்ரோபோன் ஸ்பீக்கர் கொடுக்கப்பட்டுள்ளதால் பாடல்களுக்கு இடையே போனில் அழைப்பு வந்தாலும் இந்த ஸ்பீக்கர் மூலமாக பதிலளிக்க முடியும். பாடல்கள் பதிவு செய்யப்பட்ட எஸ்.டி. கார்டு இணைத்துக் கொள்ளவும் ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. 10 மீட்டர் தூரம் வரை இந்த ஸ்பீக்கரின் சத்தம் கேட்கும். ஆறு மாத வாரண்ட்டியுடன் கிடைக்கும் இந்த ஸ்பீக்கரின் விலை 890 ரூபாய். 

Next Story