மாவட்ட செய்திகள்

வானவில் : டைசன் ஏர் பியூரிபயர் + "||" + Vanavil : Tyson Air Purifier

வானவில் : டைசன் ஏர் பியூரிபயர்

வானவில் :  டைசன் ஏர் பியூரிபயர்
சுத்தமான காற்று இப்போது மிகவும் அரிதாகி விட்டது. அதிலும் நகர்ப்புறங்களில் வசிப்போர் சுத்தமான காற்றை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 டெல்லியில் வாகன புகையால் எழும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடும் அளவிற்கு மோசமடைந்து விட்டது.

இதைக் கருத்தில் கொண்டே வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கும் டைசன் நிறுவனம் காற்று சுத்திகரிப்பானை (ஏர் பியூரிபயர்) அறிமுகம் செய்துள்ளது. வீட்டில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கருவி, காற்றிலுள்ள 99.95 சதவீத உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மாசுக்களை அகற்றி விடுகிறது.


வீட்டினுள் கண்ணுக்குத் தெரியாத மாசுக்கள் உள்ளன. வீட்டு அறையினுள் உள்ள மாசுக்களை உறிஞ்சி, அதை சுத்தப்படுத்தி ஆரோக்கியமான காற்று கிடைக்க வழிவகை செய்கிறது. மேலும் இது தானாகவே செயல்பட்டு காற்றிலுள்ள மாசுக்களை உறிஞ்சி விடும். வீட்டு அறையில் உள்ள மாசு எந்த அளவுக்கு நீக்கப்பட்டு விட்டது என்பதை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும். ஸ்மார்ட்போன் மூலமே இதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்தலாம். சுழற்சி அடிப்படையில் ஏறக்குறைய 350 டிகிரி வரை சுற்றும். இதை பராமரிப்பது எளிது. இதில் உள்ள பில்டர்களை மாற்றுவதும் எளிது. எப்போது பில்டர்களை மாற்ற வேண்டும் என்ற தகவலையும் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு தெரிவித்துவிடும். தூங்கும்போது கண்களை உறுத்தாத வகையில் வெளிச்சத்தை உமிழ்ந்தபடி செயல்படும். இதற்குரிய ரிமோட் கண்ட்ரோலை இதன் மேல் பகுதியில் வசதியாக வைத்துவிட முடியும்.

காற்றில் பரவும் கிருமிகளால் அடிக்கடி அலர்ஜி, ஆஸ்துமா, மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது. இதன் எடை 4.98 கிலோவாகும். விலை ரூ. 43,900 ஆகும். அமேசான் இணையதளத்தில் ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது.

இது சுழற்சி அடிப்படையில் செயல்படுவதால் அறை முழுவதும் சுழன்று காற்றை உறிஞ்சி வடிகட்டி சுத்தமான காற்றை அனுப்புகிறது. தூசு, பூஞ்சை, பாக்டீரியா, வளர்ப்புப் பிராணி மூலம் பரவும் கிருமிகளையும் இது உறிஞ்சிவிடுகிறது. அத்துடன் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சு வாயு மற்றும் கெட்ட நெடியையும் இது உறிஞ்சிவிடும். இதில் 10 வகையான சுழற்சி முறைகள் உள்ளன. இவற்றை நீங்கள் உங்கள் வசதிப்படி தேர்வு செய்யலாம். 


தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : கூகுளின் பிக்ஸெல் ஸ்லேட்
வித்தியாசமாக, மற்றவர்களைவிட தொழில்நுட்பத்தில் மேம்பட்டதாக தனது தயாரிப்புகள் இருக்க வேண்டும் என்பதில் கூகுள் நிறுவனம் கவனமாக உள்ளது.
2. வானவில் : டெல் ஏலியன்வேர் அறிமுகம்
கம்ப்யூட்டர், லேப்டாப் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள டெல் நிறுவனம் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கேற்ற லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
3. வானவில் : நவீன தோட்டக்காரன்
இப்போது எல்லாமே நவீனம்தான். இதற்குக் காரணமே ஆள் பற்றாக்குறை. நகர்பகுதிகளில் தோட்டம் அமைப்பது கொஞ்சம் சிரமம்.
4. வானவில் : நான்கு கேமராக்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ 9 அறிமுகம்
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் திகழும் கொரிய நிறுவனமான சாம்சங் தற்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனின் பின்பகுதியில் 4 கேமராக்களுடன் அறிமுகம் செய்துள்ளது.
5. வானவில் : நோரியா காம்பாக்ட் ஏர் கண்டிஷனர்
பொதுவாக ஏர் கண்டிஷனர் வாங்குவது என்ற உடனேயே அதை எங்கே பொறுத்துவது என்ற பிரச்சினை எழும்.