அரசு கலை கல்லூரியில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை முகாம்
அரசு கலை கல்லூரியில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.
தாமரைக்குளம்,
அரியலூர் அரசு கலை கல்லூரியில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், புதிய வாக்காளர்கள் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிற்றரசு தலைமை தாங்கினார். இந்த முகாமில் 1.1.2019 அன்று 18 வயது நிறைவடையவுள்ள அனைத்து மாணவ, மாணவிகளையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக அவர்களிடம் படிவம்-6 வழங்கப்பட்டு, புகைப்படத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களுடன் வயதை உறுதி செய்வதற்காக பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்று, மாற்றுச்சான்றிதழும், முகவரியை உறுதிசெய்ய ஆதார், குடும்ப அட்டைகளின் நகல்கள் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட உள்ளது. முகாமில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது பெயரினை பதிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலகத்துடன் இணைந்து நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் கருணாகரன், செல்வமணி ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story