தூய்மை இந்தியா திட்டம் குறித்து தபால் அட்டையில் எழுதி பிரதமருக்கு அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்
வளநாடு அருகே அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தூய்மை இந்தியா திட்டம் குறித்து தபால் அட்டையில் கடிதம் எழுதி பிரதமருக்கு அனுப்பி வைத்தனர்.
துவரங்குறிச்சி,
திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 101 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 15 நாட்களாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மற்றும் விழிப் புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளின் மேற்பார்வையில் மாணவ, மாணவிகள் பள்ளியை பசுமை ஆக மாற்றுதல், நீர் தூய்மை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூய்மை விழிப்புணர்வு போட்டிகள் உள்ளிட்டவையும் நடைபெற்று வருகிறது. நீர் சேகரிப்பு, தூய்மை இந்தியா குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்தல் உள்ளிட்டவைகளையும் மாணவ, மாணவிகள் செய்து வருகின்றனர்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக திட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு கருத்து தெரிவித்து, தபால் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாணவ, மாணவிகள் தூய்மை இந்தியா திட்டம் குறித்த தங்களது கருத்துக்களை தபால் அட்டையில் கடிதமாக எழுதி கல்வித்துறை அதிகாரிகள் மூலம் அனுப்பி வைத்தனர். இதே போல் குப்பை மேலாண்மை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

Related Tags :
Next Story