மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் பள்ளி மாணவி மர்ம காய்ச்சலுக்கு பலி சுகாதாரத்துறையினர் விசாரணை + "||" + In Nagercoil, a school student has been hospitalized for mysterious fever

நாகர்கோவிலில் பள்ளி மாணவி மர்ம காய்ச்சலுக்கு பலி சுகாதாரத்துறையினர் விசாரணை

நாகர்கோவிலில் பள்ளி மாணவி மர்ம காய்ச்சலுக்கு பலி சுகாதாரத்துறையினர் விசாரணை
நாகர்கோவிலில் விடுதியில் தங்கி படித்த பள்ளி மாணவி மர்ம காய்ச்சலுக்கு பலியானார். இதுதொடர்பாக சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தினர்.
நாகர்கோவில்,

பேச்சிப்பாறை வேப்பமூட்டுவிளையை சேர்ந்தவர் ஜெயதாஸ் (வயது 44). இவருடைய மகள் அனிட்டா (16). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். தாயார் இறந்து விட்டதால் அனிட்டா நாகர்கோவில் சைமன்நகர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி படித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் அனிட்டா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். விடுதி காப்பாளர் அவரை பள்ளிக்கு அனுப்பாமல் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார். ஆனாலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லையாம்.


நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் விடுதி காப்பாளர் அனிட்டாவின் உடல்நிலையை அறிய அவர் தங்கியிருந்த அறைக்கு சென்றபோது அவர் பேச்சு, மூச்சு இல்லாத நிலையில் கிடந்ததாக தெரிகிறது. அவரை ஆம்புலன்சில் ஏற்றி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அனிட்டா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மாணவியின் தந்தை ஜெயதாஸ் கொடுத்த புகாரின்பேரில் நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மர்ம காய்ச்சலால் மாணவி அனிட்டா இறந்த சம்பவம், அவர் படித்த பள்ளி, தங்கியிருந்த விடுதி மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்த நாகர்கோவில் நகராட்சி நகர்நல அதிகாரி கின்சால் தலைமையில், சுகாதார ஆய்வாளர் பிரிஜேஷ் தலைமையிலான சுகாதாரத்துறையினர் அனிட்டா தங்கியிருந்த விடுதியை ஆய்வு செய்தனர். அனிட்டாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருந்ததால் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய கொசுப்புழுக்கள் இருக்கிறதா? என்றும் சோதனை செய்தனர்.

பின்னர் நகர்நல அதிகாரி கின்சால் கூறியதாவது:-

மாணவி அனிட்டா தங்கியிருந்த விடுதியில் 86 மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அவர்களில் யாருக்கும் காய்ச்சல், தலைவலி ஏற்பட்டதா? என்று விசாரித்தோம். யாருக்கும் அப்படி இல்லை. காய்ச்சல் காரணமாக மாணவி அனிட்டா இறக்கவில்லை. ஏனென்றால் 2 நாட்களுக்கு முன்பு அவரது ரத்தத்தை பரிசோதனை செய்தபோது டெங்கு போன்ற காய்ச்சலுக்கான எந்த அறிகுறியும் இல்லை. எனவே வேறு ஏதாவது நோய் காரணமாக அவள் இறந்திருக்க வாய்ப்புள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் அவர் என்ன நோயினால் இறந்திருக்கிறார் என்பது தெரிய வரும் என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஊட்டியில் மரம் வெட்டும் போது பரிதாபம் மரக்கிளை முறிந்து விழுந்து தொழிலாளி சாவு
ஊட்டியில் மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் மரக்கிளை முறிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.
2. மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதியது: பாட்டி-பேரன் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி
தஞ்சை அருகே டேங்கர் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பாட்டி, பேரன் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.
3. மகளை கொன்று வி‌ஷம் குடித்த தாய் சிகிச்சை பலனின்றி சாவு; காவலாளி மீது வழக்கு
மகளை கொன்று வி‌ஷம் குடித்த தாய் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக காவலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
4. 9 மாத கர்ப்பிணி சாவு எதிரொலி: பன்றி காய்ச்சல் பாதித்த கிராமத்தில் பொதுமக்கள் பீதி
வானூர் அருகே பன்றி காய்ச்சலுக்கு 9 மாத கர்ப்பிணி பலியானார். அவரது மகனுக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு உள்ளதால் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்து தாமாக முன்வந்து 100க்கும் மேற்பட்டவர்கள் ரத்த பரிசோதனை செய்து கொண்டனர்.
5. திருப்பூரில் விளையாட்டு வினையானது: கத்திரிக்கோல் நெஞ்சில் குத்தியதில் சிறுவன் சாவு, அண்ணன் கைது
திருப்பூரில் கத்திரிக்கோலை கையில் வைத்து சுற்றி விளையாடியபோது தவறி விழுந்ததில் சிறுவனின் நெஞ்சில் குத்தியதில் பரிதாபமாக இறந்தான். இதைத்தொடர்ந்து அவனுடைய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.